• Jul 24 2025

பிக்பாஸ் சீசன் 7 இல் களமிறங்கும் ஷு தமிழ் சீரியல் நடிகர்- அடடே இவர் சாக்லெட் ஹீரோவாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போவதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன் அறிவித்திருந்தார். இரண்டு வீடுகளில் நடக்கும் போட்டியை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.


பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி, விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.


ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. மேலும் இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்க எட்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சத்யா சீரியல் நடிகரான விஷ்ணு விஜய் இந்த ஷோவில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement