• Jul 23 2025

வீட்டிற்கு வந்த நபர்... அதிர்ச்சியில் ஆடிப்போன குடும்பம்... இவர்தான் புதிய குணசேகரனா..? வெளியானது 'Ethirneechal' சீரியல் ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஜான்சிராணி குணசேகரன் வீட்டில் உள்ளவர்களிடம் "அப்பத்தா சொல்லுற மாதிரி அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி போய்ட்டு இருக்கணுமாம், அது என்ன கட்டம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க" என்கிறார். 


பதிலுக்கு நந்தினி "ஏய் அவ்வளவு தான் உனக்கு மரியாதை" எனக்கூறி ஜான்சிராணியிடம் கோபத்தில் கத்துகின்றார். அதற்கு விசாலாட்சி "இந்தாங்கடி, இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க போதும்" எனத் திட்டுகின்றார். விசாலாட்சி வீட்டு மருமகள்களை திட்டியதை பார்த்து ஜான்சிராணி சந்தோசப்படுகின்றார்


அந்த சமயத்தில் குணசேகரன் வீட்டிற்கு காரில் யாரோ வருகின்றார்கள். அதை பார்த்ததும் கரிகாலன் "ஐயோ அத்தை அடுத்த இடி வந்திடிச்சு" என்கின்றார். காரில் வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


இந்தப் ப்ரோமோவை வைத்துப் பார்க்கும் போது காரில் வந்தது புதிய குணசேகரன் தான் என்பது ஓரளவிற்கு புரிகின்றது. எது எவ்வாறாயினும் இன்றைய எபிசோட்டின் மூலமாக பொறுத்திருந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்வோம்.  

Advertisement

Advertisement