• Jul 25 2025

செம்பருத்தி சீரியல் நடிகருடன் ஜோடி சேரும் சித்தி 2 வெண்பா- அதுவும் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வந்தவர் தான் ப்ரீத்தி. இவர் டிக்டாக் மூலம் பிரபல்யமானதை அடுத்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் உருவான சித்தி 2 சீரியலில் வெண்பா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.


இருப்பினும் ராதிகா இந்த சீரியலை விட்டு விலகியதும் முழுக்க முழுக்க இவரைச் சுற்றியே கதை நகர்ந்தது. அந்த வகையில் தற்பொழுது இந்த சீரியல் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் இவர் மீண்டும் சன்டிவியில் புதிய சீரியவ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.அந்த  சீரியலில் இவருடன் ஜோடியாக நடிக்கப் போவது செம்பருத்தி சீரியலில் ஆதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அக்னி தான் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement