• Jul 25 2025

முத்தமிட கூச்சப்பட்டு நிற்கும் சிவகாமி- ஜெசி குடும்பத்தினரால் செந்திலிடம் வாங்கிக் கட்டிய அர்ச்சனா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனா இவங்களுக்கு நம்மளோட பழக்க வழக்கம் சம்பிரதாயமெல்லாம் தெரியாது அப்படி இருக்கையில் எப்படி சீர்வரிசை எல்லாம் செய்வார்கள் என சொல்ல சிவகாமியும் நாம இதெல்லாம் அவங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும் என சொல்லிக் கொண்டிருக்க மேல தாளத்தோடு சீர்வரிசையோடு பெண்ணை அழைத்து வருகின்றனர். இதைப் பார்த்த அர்ச்சனா அதிர்ச்சி அடைய செந்தில் அவளை கிண்டல் அடிக்கிறார்.


அடுத்ததாக இந்து முறைப்படி ஆதி மற்றும் ஜெசிக்கு திருமணம் நடந்து முடிய அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு ஜெசி சந்தியா சரவணனிடம் இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் என நன்றி கூறுகிறார். அவளுடைய பெற்றோர்கள் சந்தியா சரவணன் இருக்க நன்றி கூற அவர்கள் நாம இப்ப ஒரே குடும்பமாகி விட்டோம் இதெல்லாம் எதுக்கு என கூறுகின்றனர்.


பின்னர் கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் ஆதியை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்த சொல்ல சிவகாமி கூச்சப்பட்டு நிற்கிறார். பிறகு எல்லோரும் ஆதிக்கு அறிவுரை சொல்ல நீங்க எல்லோரும் ஒரே குரூப்பா ஆகிட்டீங்க என சொல்ல ஜெசி அதெல்லாம் நாங்க எப்படியோ ஃபார்ம் பண்ணிட்டோம் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ரூமுக்குள் ஆதி நீ வேண்டுமானால் என்ன புருஷனை சொல்லிக்கொள்ளலாம் ஆனால் ஒரு காலத்திற்கும் நான் உன்னை என் மனைவினு அங்கீகாரம் கொடுக்க மாட்டேன். நான் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டு நிற்க நீ தான் காரணம் என சொல்ல ஜெசி அதிர்ச்சி அடைகிறார்.


Advertisement

Advertisement