• Jul 25 2025

எந்த ஹீரோவும் செய்யாத விடயத்தை துணிந்து செய்த சிம்பு- மாஸ் ஹீரோ என்றால் சும்மாவா?- வியப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அடுத்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் பத்து தல. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொதுவாக திரைப்படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடக்கும்போது அதில் ரசிகர்களை குறைவாகவே அனுமதிப்பார்கள். ஆனால் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கால்வாசி ரசிகர்களையே அனுமதித்திருந்தனர்.


அந்த இசை வெளியீட்டு விழா கிட்டத்தட்ட ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு சந்திப்பு போல நடந்தது. இதற்கு நடுவே பெரிய கதாநாயகர்கள் கூட தங்கள் ரசிகர்களுக்கு செய்யாத விஷயத்தை சிம்பு இந்த இசை வெளியீட்டு விழாவில் செய்துள்ளார்.


இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து ரசிகர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர் பத்து தல குழுமத்தினர். சிம்பு தனது ரசிகர்களுக்கு இந்த அளவிற்கு மதிப்பு அளித்துள்ளாரே! என தமிழ் சினிமாவில் பலரும் இந்த செயல் குறித்து வியப்படைந்துள்ளனர். இதுக்குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும்போது முழுக்க முழுக்க இது சிம்புவின் யோசனை என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement