• Jul 25 2025

சிம்பு ஒரு ராக்கோழி சின்ன சண்டை வந்ததால் விலகிட்டேன்- எதிர்நீச்சல் மாரிமுத்து சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களாலும் பார்க்கும் சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் இப்போது முக்கியமானதாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் சீரியலில் நடிக்காத பல நடிகர்கள் இதில் களம் இறங்கி இருக்கின்றனர். அந்த வகையில் குணசேகரன் ஆக நடிக்கும் நடிகர் மாரிமுத்துவும் ஒருவர். இவர் இதுவரைக்கும் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் பல சினிமாக்களில் நடித்திருக்கிறார்.


அத்தோடு நடிகர் மாரிமுத்து பாடல் ஆசிரியர் வைரமுத்துவிடம் ஆரம்ப காலகட்டத்தில் உதவியாளராக இருந்து பிறகு ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். அதுபோல தானும் ஒரு இயக்குனராகவும் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.அதில் சிம்புவின் மன்மதன் படத்தில் நான் நிறைய கெல்ப் பண்ணியிருக்கிறேன். எடிட்டிங்  வேலை அதிகமா செய்திருக்கிறேன். பின்னர் படம் ரிலீஸ் ஆகிற டைம்ல சிம்புவுக்கும் எனக்கும் இடையில் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதால் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டேன்.


அதே போல நியூ படத்தின் எடிட்டிங் வேலை சிம்பு வீட்டில் தான் நடந்திச்சு. அப்போ அந்த வேலை எல்லாமே இரவு 10 மணிக்கு மேல தான் நடக்கும். சிம்புவும் துாங்காமல் இருப்பார்.சிம்பு ஒரு ராக்கோழி இரவு முழுவதும் துாங்காமல் தான் இருப்பார். பகலில் தான் நல்லா துாங்குவாரு என ஜாலியாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement