• Jul 25 2025

சிம்பு தான் என்னுடைய முதல் மகன்- ஓபனாக பேசிய சரண்யா பொன்வண்ணன்- என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ரிலீசான நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். முதல் படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆனார் சரண்யா.

இவர் பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா, பசும்பொன் ஆகிய படங்களில் நடித்தபோது, அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பொன்வண்ணன் இவர் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சரண்யா, 2000-ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.


அவர் தனது இரண்டாவது இன்னிங்சில் அம்மா வேடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுந்தந்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.


இந்த நிலையில் சரண்யா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது நான் முதல் முதலாக அம்மாவாக சிம்புவுக்கு தான் அலை படத்தில் நடித்திருந்தேன். சிம்பு தான் என்னுடைய முதல் மகன். அம்மா காரெக்டரில் நடிக்க கேட்ட போது எனக்கு எதுவும் தோணல. அம்மா காரெக்டரில் நடிக்கிறோமோ நமக்கு சின்ன வயசு அப்படி என்று எதுவுமே யோசிக்கல.ஏதோ நடிக்க கூப்பிடறாங்க போய் நடிச்சுக் கொடுப்போம் என்றதால் தான் போனேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement