• Jul 26 2025

பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல் - சீரியல் நடிகர் மீது பரபரப்பு புகார்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது பிரபல பாடகர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பிரபல பாடகர் கிருஷ்ணா கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் நான் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தேன்.

அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் சக நடிகர்களுடன் இருந்தார்.என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிடுமாறு மிரட்டினார்.

காரணம் கேட்டால் உன்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளேன், உன் நாட்களை எண்ணிக் கொள் என்று மிரட்டியதால் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை, அவருடன் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கான காரணமும் தெரியவில்லை.ஆதலால் தாங்கள் தயவு செய்து அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் என் முதிர்ந்த தாயாருடன் தனியாக வசித்து வருவதால், ஈஸ்வரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement