• Jul 25 2025

என்னது... காதல் கணவரை விவகாரத்து செய்கிறாரா சுப்ரமணியபுரம் பட நடிகை? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுவாதி ரெட்டி, சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை ஸ்வாதி ரெட்டி நடித்த முதல் படத்திலே சிறந்த நடிப்பு, மெடுக்கான சிரிப்பு ,காந்த பார்வை என்று ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இதையடுத்து, போராளி படத்தில் மீண்டும் சசிக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு விஜய்சேதுபதியுடன் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

ஏராளமான படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்வாதி ரெட்டி, கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். தனது சமூக வலைதள பக்கங்களில் அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்த ஸ்வாதி ரெட்டி திடீரென அந்த போட்டோக்களை டெலிட் செய்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதனால், திருமண புகைப்படத்தை அவர் டெலிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஸ்வாதி விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாகவும், இன்ஸ்டாகிராமில் இருந்து போட்டோவை டெலிட் செய்துவிட்டதாகவும் 2020ஆம் ஆண்டே தகவல் பரவியது. 

இதையடுத்து, அது போலி ஐடி என்று கூறியிருந்த நிலையில், தற்போது அவர் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.எனவே மேலதிக தகவல்களுக்காக காத்திருப்போம்.

Advertisement

Advertisement