• Jul 25 2025

அஜித் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த சிறுத்தை சிவா, சிம்பு, அனிருத்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் நடிகர் சிலம்பரசன், இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் வந்து துக்கம் விசாரித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. பத்து தல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில் சிலம்பரசன் நிகழ்வை தொடர்ந்து அஜித்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisement

Advertisement