• Jul 24 2025

மாவீரன் படத்திற்காக திரையரங்குகளை அலங்கரித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்- வைரலாகும் போட்டாஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. 


அதன்படி இன்று காலை 9 மணிகாட்சி பார்க்க தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி, கொண்டாடி வருகின்றனர். இதனால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.


மாவீரன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்டாக நடித்திருக்கிறார். அதன் அடிப்படையில், வித்தியாசமான கார்டூன் கதாபாத்திரங்கள் அடங்கிய ஷர்ட் அணிந்தபடி தியேட்டருக்கு வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.


இந்த நிலையில் மாவீரன் படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஒவ்வொரு தியேட்டரிலும் உயரமான பெனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement