• Jul 24 2025

அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்...காரணம் என்ன தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். 


இவருடைய பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை கிராமம், இசை வேளாளர் சேர்ந்தவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார்.


மேலும் இவர் மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் ஒன்றான திண்டுக்கல் பாக்ஸ் ஆபிசில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் அதிக வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


கமலின் விக்ரம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் வசூலை விட, விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரு திரைப்படங்களும் குறைவான வசூலை பெற்றும் டான் படத்திற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. 

Advertisement

Advertisement