• Jul 24 2025

துணிவு படத்தின் மூன்றாவது போஸ்டர்.. லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துணிவு படத்தின் புதிய போஸ்டர் திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் நடிகர் அஜித் இறுதியாக நடித்த திரைப்படம் தான் வலிமை .இப் படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அத்தோடு  சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அத்தோடு பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். அத்தோடு கலை இயக்குநராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.மேலும்  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.


துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


துணிவு படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இவ்வாறுஇருக்கையில்  இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் புதிய போஸ்டரை திரையரங்க பேனர் வடிவில் வெளியிட்டுள்ளார்.  இந்த போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என்ற வாசகத்துடன் No Guts No Glory என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. வெண்ணிற ஆடையில் கூலிங் கிளாஸ் அணிந்து காலரை தூக்கி விட்டபடியே அஜித்தின் லுக் அமைந்துள்ளது.அத்தோடு  காதில் கடுக்கனுடன் முகத்தில் நீண்ட தாடியுடன் இருக்கும் அஜித்தின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



 

Advertisement

Advertisement