• Jul 24 2025

ஒரு பையனின் உயிரைக் காப்பாற்றிய சிவகார்த்திகேயன்- இதுவரை வெளிவராத தகவலை கூறிய முக்கிய பிரபலம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்து இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக அசத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் இந்த மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இப்படம் வரும் ஜுலை 14ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் ஒருவருக்கு விபரீதம் ஏற்பட எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அவருக்கு உதவி செய்த விஷயம் வெளியாகியுள்ளது.

நடிகர் முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் டெக்னீஷியன் ஒருவர் மோசமான விபத்தில் சிக்கினார்.அவருக்கு ஏகப்பட்ட சர்ஜரி செய்யப்பட்டதாம், கிட்டத்தட்ட ரூ. 40 லட்சத்துக்கு மருத்துவ செலவு ஏற்பட்டதாகவும் அந்த மொத்த பணத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார், அதற்கு பெரிய மனசு வேண்டும் என முனிஷ்காந்த் வியப்பாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement