• Jul 25 2025

பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் மற்றும் லாவண்யாவின் நிச்சயதார்த்தம்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராதிகா - சரத்குமார், குஷ்பு - சுந்தர் சி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ஆதி - நிக்கி கல்ராணி என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகிலும் ரீல் ஜோடிகள், ரியல் ஜோடிகள் ஆன நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி தான் வருண் தேஜ் - லாவண்யா திரிபதி. இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர், நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இதில் வருண் தேஜ் வாரிசு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார். 


சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவின் மகன் தான் வருண் தேஜ். இவரும் நடிகை லாவண்யா திரிபதியும் 2 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக காதலித்து வந்தனர்.இவர்கள் இருவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது வந்தாலும், அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் காத்துவாக்குல கடந்து சென்றது இந்த ஜோடி. 


இதனிடையே அண்மையில் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்றைய தினம் [ஜூன் 9-ந் தேதி ]ஐதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வில்  குடும்ப உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.




Advertisement

Advertisement