• Jul 26 2025

“தென்னிந்தியாவின் நந்திதா தாஸ் தான் அதிதி பாலன்” புகழ்ந்து தள்ளும் தங்கர் பச்சான்!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தங்கர் பச்சான் இயக்கத்தில் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ, சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அதிதிபாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 


இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இப்படம் குறித்தும், அதிதி பாலன் குறித்தும் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட `கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடிக்கிறார்" எனக் கூறியிருந்தார்.


மேலும் "அருவி படத்தில் `அருவி' பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் ஏற்படுத்தும். மிகையான நடிப்பு வெளிப்பட்டுவிட்டால் படத்தின் கருவிற்கு களங்கம் ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்விலேயே `கண்மணி' பாத்திரத்தைப் படமாக்கினேன். என்னுடைய நம்பிக்கையை நூறு விழுக்காடு நிறைவு செய்திருக்கின்றார் நடிகை அதிதி பாலன். தான் ஏற்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகள் மிக அரிதாகவே உள்ளனர்" எனவும் கூறி உள்ளார்.


அத்தோடு "'தென் இந்தியாவின் நந்திதா தாஸ் தான் அதிதி பாலன்' என்பதை எனது அனுபவத்தில் உணர்கிறேன். இவரின் நடிப்பானது இப்படத்தைக் காணும் அனைவரையும் கலங்கடித்து மீளாத தாக்கத்தை உருவாக்கும்'' என அதிதி பாலனின் கதாபாத்திரம் குறித்து மிகவும் பெருமையுடன் பேசியுள்ளார் தங்கர் பச்சான்.

Advertisement

Advertisement