• Jul 25 2025

பட்டமளிப்பு விழாவில் விஜய்யின் ஸ்டைலில் முத்தமிட்ட மாணவர்- தமன் போட்ட வைரல் பதிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். 

இந்நிலையில் தான் விஜய் ரசிகர் ஒருவர் பட்டமளிக்கும் விழாவில் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதாவது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் விஜய்யுடைய அந்த பிரத்யேக ஸ்டைலை பயன்படுத்தி இருந்தார். இதனை பார்த்த மேடையில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த விடியோவை பகிர்ந்த ரசிகர்கள் “என்னடா அநியாயம் பன்றிங்க” என்று பதிவிட்டு வரும் நிலையில். வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய மகிச்சியை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement