• Jul 24 2025

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஜான்வி கபூர்- சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். ஜூனியர் என்டிஆரின் 30 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஜான்வி.கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார்.


இந்நிலையில், ஜான்வி கபூரின் 26வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு. இறுதியாக NTR 30ல் இணைந்தேன். ஜூனியர் NTR நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாவில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளார். அதன் கீழே ஜூனியர் NTR-ம் ஜான்வி கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.


 NTR 30 படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு திரையுலக நடிகைகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement