• Jul 25 2025

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.இவர்களின் நடிப்பில் துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூல் செய்து வருகின்றது.


ஆனால் தற்போது சற்று நிலைமை மாறியுள்ளது. ஆம், துணிவு படத்தின் வசூலை வாரிசு படம் நெருங்கி வருகிறது என தகவல் கசிந்துள்ளது.

அத்தோடு கடந்த 7 நாட்களில் துணிவு படத்தை விட வசூலில் பின்தங்கி இருந்த வாரிசு படம், 8 நாட்கள் முடிவில் துணிவு படத்தின் வசூலை நெருங்கிவிட்டது.


ஆகையால் தற்போது துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களில் தமிழகத்தில் இதுவரை ரூ. 95 கோடி வரை சமமாக வசூல் செய்துள்ளது.


அத்தோடு 8 நாட்கள் முடிவில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் இந்த இரு திரைப்படங்களின் நிலையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement