• Jul 24 2025

100 பேருக்கு மட்டுமே இந்த சலுகை... பிக்பாஸ் ஜனனி கூறிய அந்த விஷயம்.. குஷியில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 6இல் போட்டியாளராகக் கலந்து கொண்டிருந்த ஒருவர் தான் ஜனனி குணசீலன். இவர் இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியும் கூட. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த நாள் முதலே இவருக்கு நிறைய ஆர்மிகள் தொடங்கப்பட்டன. அதுமட்டுமல்லாது குட்டி த்ரிஷா என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 


ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் குறைந்து சென்றுவிட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 70 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் ஜனனி தாக்குப்பிடித்துள்ளார். 


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இவருக்கு தற்போது விஜய்யுடன் இணைந்து 'தளபதி 67' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றார்.


அந்தவகையில் தற்போதும் ஒரு விளம்பர வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் யூடியூப் சேனல் ஒன்று புதிதாக டிவி சேனல் ஒன்றினை ஆரம்பிக்கப் போவதாகவும் offer ஒன்றினை வழங்க இருப்பதாகவும் கூறுகின்றார்.

அந்தவகையில் 100 பேருக்கு டிவி offer கொடுப்பதாக கூறி இருக்கின்றார். இந்த வீடியோவில் ஜனனி மட்டுமல்லாது அவர் பேசுகின்ற வார்த்தைகளும் ரொம்பவே கியூட்டாக இருப்பதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement