• Jul 25 2025

முடிய போகும் சன் டி.வி. யின் ஹிட் சீரியல் வந்தாச்சு புது சீரியல்! ஹீரோயின் யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு டிவி, காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் மட்டும் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும்.

எனவே இதில் ஏகப்பட்ட தொடர்கள் வருகின்றன, டீ.ஆர்.பியில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இருக்கும். 

எனினும் தற்போது சன் டிவி சீரியலில் டாப்பில் இருக்கும் ஓரு தொடர் முடிவை நோக்கி பயணிப்பதாக தகவல் வந்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா சன் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.இவர் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.

பின் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் தாய்மார்கள், ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 சீரியல் தொடரில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதில் நங்கூரமாய் பற்றிக்கொண்டார். இளைஞர்களை அதிகம் சீரியல் பார்க்கவைத்த பெருமை இவருக்கே சேரும் என கூறலாம்.

அந்தவகையில் இவர் சன் சன் டி.வியில் புதிதாக வர இருக்கும்  சீரியலில் நடிக்க உள்ளாராம் .

இதனை சன் குடும்பத்தில் இணையும் மற்றும் ஓர் குடும்பம்.உறவாய் உயிராய் பாசத்தோடு வருகிறாள் "மலர்".விரைவில் உங்கள் சன் டி.வி. யில் என குறிப்பிட்டு சன் டி.வி ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement