• Jul 24 2025

“என் பேத்தி தள்ளிவிட்டப்போ பயங்கர கோபம் வந்தச்சு” போகப்போகத்தான் அஸீம் நல்ல பையனா தெரிஞ்சாரு- தனலட்சுமியின் குடும்பத்தினர் ஓபின் டோக்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் மிகவும் ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதன் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தோன்றி இருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் பிரத்யேக ரசிகர் கூட்டம் வெளியே இருந்தது. அதிலும் குறிப்பாக சாதாரண ஒரு நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வெளியே வந்த பிறகு மக்கள் செல்வியாகவும் மாறி இருந்தார் தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் யாராக இருந்தாலும் தான் செய்வதில் எந்த தவறும் இல்லை என்றால் மிகவும் துணிச்சலாக எதிர்த்து நிற்கக் கூடியவர். தன் மனதில் பட்டதை எந்தவித தயக்கமும் இல்லாமல் யார் முன்பும் தைரியத்துடன் பேசும் தனலட்சுமிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, பாதியில் வெளியேறி இருந்தாலும் மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பு என்பது அபாரமானது. இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பத்தினருடன் தனலட்சுமி கலந்து கொண்டார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களையும் தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். அந்த சமயத்தில், அசீமுக்கு தனலட்சுமியுடன் தான் பல இடங்களில் மோதல்கள் இருந்ததாகவும், அதனை பார்க்கும் போது ஒரு குடும்பத்தினராக உங்களுக்கு எப்படி இருந்தது என்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தனலட்சுமியின் பாட்டி பதிலளித்து பேசுகையில், "என் பேத்திய தள்ளி விட்டப்போ எல்லாம் எங்களுக்கு பயங்கரமா கோபம் வரும். முதல்ல வெளிய கூட்டிட்டு வா புள்ளையை -ன்னு சொல்லிட்டே இருப்பேன் என் புள்ளைங்க கிட்ட. அங்க எல்லாரும் விளையாட தான் போய் இருக்காங்க, அந்த பையன் (அசீம்) ஏதும் வேணும்னு செய்யல. அந்த இடத்தில செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்ததுனால அப்படி செஞ்சாருன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் பார்க்க பார்க்க தான் அசீம் ரொம்ப நல்ல பையன்னு தெரிஞ்சாரு" என தெரிவித்தார்.

Advertisement

Advertisement