• Jul 24 2025

வெளிநாட்டில் மகளுடன் சுற்றுலா சென்ற சுந்தர் C - குஷ்பு.. வைரலாகும் கியூட் போட்டோஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட்  ஆகின.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.  பின் குணசித்திர வேடங்களில் குஷ்பு நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

கடைசியாக இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுந்தர்.C ஐ 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் நடிகை குஷ்பு, சுந்தர் சி மூத்த மகளுடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குஷ்பு .அவர்  வெளியிட்ட புகைப்படங்களில் அவரது மகளை பார்க்க சுந்தர் சி போலவே உள்ளது என சிலர் சொல்லியுள்ளனர்.



Advertisement

Advertisement