• Jul 25 2025

தனுஷின் வாத்தி படத்தில் டீச்சராக நடித்த ஹீரோயின் படிச்சது இது வரைக்குமா.?.. அவரே சொன்ன தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  தனுஷ் நடிக்கும்  'வாத்தி' படத்தில் பிரபல மலையாள நடிகை சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார்.  வருகின்ற  பிப்ரவரி 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

சமீபத்தில் சில நிகழ்வுகளில் பேசிய நடிகை சம்யுக்தா, தன் பெயருக்கு பின்னொட்டாக இருக்கும் தனது சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்ததுடன், இனி தன்னை சம்யுக்தா என்கிற பெயரை மட்டுமே சொல்லி அடையாளப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.  

பாலக்காடு பெண்ணான நடிகை சம்யுக்தா, தமிழ் நன்றாக தெளிவாக பேசக்கூடியவர் தான் என்றாலும் அரிதாக தமிழ் படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா உயிரியல் பாடமெடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது,

இந்நிலையில்  தனது படிப்பு குறித்து முன்பொருமுறை சம்யுக்தா பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது,  “இந்த படிப்பை தான் ஒருவர் படிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்தவும் முடியாது” என்றும், தான் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தவர், அனைவரும் கல்வி பயிலுதல் அவசியமானது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement