• Jul 25 2025

பார்வைக் குறைபாடு உள்ள சிறுமியின் ஆசை... ஓடிச் சென்ற பாடகி சித்ரா... கண் கலங்கி அழுத நடுவர்கள்... 'சூப்பர் சிங்கர்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதில் கண் தெரியாத சிறுமி ஒருவர் 'சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை.." என்ற பாடலைப் பாடுகின்றார். இதனையடுத்து பிரியங்கா "உனக்கு என்னெல்லாம் ஆசை இருக்கிறது" எனக் கேட்கின்றார். அதற்கு அந்தச் சிறுமி "சித்ரா அம்மாவைத் தொட்டுப் பேசணும்" என்று ஆசை இருப்பதாகக் கூறுகின்றார்.


உடனே பாடகி சித்ரா அவர்களும் மேடைக்கு ஓடிச் சென்று அந்தக் குழந்தையைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்கின்றார். இதனைப் பார்த்த நடுவர்கள் கண் கலங்கி அழுகின்றனர். அத்தோடு பாடகர் தமன் 'மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்' என்று கேட்கின்றார். அதற்கு பிறவியில் இருந்து இந்தப் பிரச்சினை இருப்பதால் ஒண்ணும் பண்ண முடியாது எனக் கூறிவிட்டதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement