• Jul 24 2025

1000கோடியை நெருங்கிய 'ஜவான்'... அட்லீ பகிர்ந்த சூப்பரான தகவல்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே சிறந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது.


குறிப்பாக ஷாருக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே இருந்தது. 

அதுமட்டுமல்லாது நயன்தாரா நடித்துள்ள முதல் பாலிவுட் திரைப்படம் இது என்பதால் நயன்தாரா ரசிகர்களும் அமோக வரவேற்புக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஜவான் படமானது சிறந்த வரவேற்பை மட்டுமல்லாது வெளியான நாளிலிருந்து இன்றுவரை நல்ல வசூலையும் பெற்று மாஸ் காட்டி இருக்கின்றது.


அந்தவகையில் இதுவரை 937கோடி வசூல் செய்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அட்லீ தனது சமூக வலைதலைப்பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றார். மேலும் இதனை வைத்துப் பார்க்கும் போது ஜவான் விரைவில் 1000 கோடியை அடைந்து விடும் என்பதில் எந்தவிதமான சாந்தேகமும் இல்லை.


Advertisement

Advertisement