• Jul 25 2025

Devotional Round இல் நடுவர்களை மெய்மறக்கச் செய்த அக்சரா... சிறுவனுக்காக தமன் செய்த நெகிழ்ச்சியான செயல்.. 'Super Singer-9' promo video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்நிகழ்ச்சியில் டிவோஷனல் ரவுண்டு இந்த வாரம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அக்சரா என்ற சிறுமி "வேப்பிலை வேப்பிலை" என்ற பாடலினை சூப்பராக பாடுகின்றார். 


அதுமட்டுமல்லாது அதனுடன் இணைந்து அழகாக டான்ஸும் ஆடுகின்றார். இவரின் திறமையைப் பார்த்து வியந்த நடுவர்கள் சொல்ல வார்த்தையே இல்லை எனக் கூறுகின்றனர். அத்தோடு இவர் பாடல் பாடும் போது அரங்கத்தில் இருந்த அனைவரும் மெய் மறந்து கேட்கின்றனர்.


மேலும் இன்னொரு சிறுவன் "வீர விநாயகா வெற்றி விநாயகா" பாடலை பாடுகின்றனர். இவரின் குரல் வளத்தினைப் பார்த்து வியந்த நடுவரும் இசையமைப்பாளருமான தமன் அந்த சிறுவனின் அம்மா கையாலேயே கோல்டன் சவர் கொடுக்கச் செய்கின்றார். இவ்வாறாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement