• Jul 25 2025

கமல் மற்றும் விக்ரமைத் தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சூர்யா- அடடே இது வேற லெவல் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தற்பொழுத கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

வணங்கான் படத்தைப் போல இப்படத்தில் இருந்தும் விலகுவதாக கடந்த வாரம் பரபரப்பு தகவல் ஒன்று, சமூக வலைதளத்தில் வட்டமிட்ட நிலையில் இதற்கு 'வாடிவாசல்' படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் தாணு  இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், விரைவில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் என கூறியிருந்தார்.


இது தவிர  இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் 3d தொழில்நுட்பத்தில் வரலாற்று கதையம்சம் கொண்ட கதையாக தயாராகி வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சூர்யா இந்த படத்தில் மொத்தம் 13 கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில், கமல் பத்து வேடங்களிலும், சமீபத்தில் வெளியான 'கோப்ரா' படத்தில் விக்ரம் 6 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில், அவர்களை மிஞ்சும் வகையில் சூர்யா 13 கெட்டப்பில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement