• Jul 25 2025

கோலாகலமாக நடைபெறும் சூர்யா-ஷிவானி நிச்சயதார்த்தம்... கண்ணீர் வடிக்கும் வெண்ணிலா... இனி நடக்கப் போவது என்ன..? ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் இணைந்துள்ள 'காற்றுக்கென்ன வேலி' தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா வெண்ணிலாவிடம் "நாளைக்கு நிச்சயதார்த்தம் தாராளமாக டைம் இருக்கு, நேர்ல தான் வரணும் என்று இல்லை, ஒரு போன் கூடப் பண்ணி வேணாம் என்றால் நிறுத்த சொல்லிடுங்க, நா ரெடியாய் தான் இருக்கேன்" என்கிறார்.


மறுபுறம் சூர்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, அப்போது சூர்யா சுற்றும் முற்றும் வெண்ணிலாவைத் தேடியவாறு அமர்ந்திருக்கின்றார். ஆனால் நெருங்கியும் வெண்ணிலா வரவில்லை, வெண்ணிலா தனது ரூமில் இருந்து அழுது கொண்டிருக்கின்றார். அதேபோன்று வெண்ணிலா வராமையினால் சூர்யாவும் செய்வதறியாது குழப்பத்தில் அமர்ந்திருக்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. சூர்யாவிற்கு ஷிவானியுடன் நிச்சயதார்த்தம் நடந்ததா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து எபிசோட்டின் மூலமாக தெரிந்து கொள்வோம்.


Advertisement

Advertisement