• Jul 26 2025

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், தமிழக அரசியல்வாதி என்று பல திறமைகளை கொண்டவர் தான் நடிகர் டி ராஜேந்தர். பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் நடிகர் ராஜேந்தர் அடுக்குமொழி வசனம் பேசுவதில் மிகச் சிறந்தவர் ஆவார்

இந்நிலையில், டி ராஜேந்தர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ரசிகர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் வணக்கம் என்று,அந்த அறிக்கையில் தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் என்ற தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் அங்கு பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வதாகவும் டி ராஜேந்தர் முழு சுயநினைவுடன் நலமாக இருப்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீக்கிரமாக சிகிச்சை முடிந்து அனைவரையும் சந்திப்பார் எனவும் கூறியுள்ளார் சிலம்பரசன்.

மேலும் அவர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார், இந்நிலையில் இன்று அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement