• Jul 25 2025

நான் என்ன மிருகமா..? ரசிகர்களை கோபத்தில் ஆவேசத்துடன் திட்டிய டாப்சி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை டாப்சி. இவர் தற்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். ஏனைய நடிகைகளைப் போலவே இவருக்கும் ஏராளமான  ரசிகர்கள் உண்டு. டாப்சிக்கு ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பது என்பது அவ்வளவாகப் பிடிக்காது.


அந்தவகையில் டாப்சி வெளியே போகும் போது ரசிகர்களும் ஊடகத்தினரும் புகைப்படம் எடுப்பதும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாக நடக்கிறது. இதனைத் தொடர்ந்து டாப்சியின் செயலை வலைத்தளங்களில் பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். 


இதுகுறித்து சமீபத்தில் டாப்சி அளித்துள்ள பேட்டியில், ''நான் 10 வருடங்களாக இந்தி படங்களில் நடிக்கிறேன். எனது ஆளுமை பற்றி ஊடக பிரிதிநிதிகளுக்கு தெரியும், படப்பிடிப்பில் மட்டுமே கேமரா முன் நிற்பேன்.

நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது என்னை படம் எடுப்பதை விரும்பவில்லை. காரின் ஜன்னலில் கேமரா வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை" எனக் கூறியிருக்கின்றார்.


மேலும் "நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நான் பாதுகாவலர்கள் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். எதிர்காலத்தில் எனது பாதுகாவலர்களால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் என்னை மரியாதையுடன் நடத்துங்கள்.

நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. என்னை கேமராவுடன் பின் தொடர்கிறீர்களே, நான் என்ன மிருக காட்சி சாலையின் மிருகமா?''என்று கோபத்துடன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement