• Jul 25 2025

9ஆண்டுகளாக டேட்டிங் செய்யும் டாப்ஸி.. அதற்காக நான் வெட்கப்படவில்லை.. உண்மையை போட்டுடைத்த பயில்வான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'ஜூம்மான்டி நாடம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை டாப்ஸி. இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார். இதனைத் தொடர்ந்து பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் டாப்ஸி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், டாப்ஸி 9 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் "டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை தான் கடந்த 9 வருடங்களாக காதலித்து வருகிறாராம் டாப்ஸி. வழக்கமாக விளையாட்டு வீரர்களுக்கு தான் நடிகைகள் மீது ஈர்ப்பு இருக்கும், ஆனால் டாப்ஸிக்கு விளையாட்டு வீரர் மீது ஈர்ப்பு உள்ளது" எனவும் கூறியுள்ளார்.


அத்தோடு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தாங்கள் வெளிநாடுகளில் அடிக்கடி டேட்டிங் செய்வோம் என டாப்ஸி கூறியதாகவும் தங்களின் காதல் உறுதியானது என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான். அதுமட்டுமல்லாமல் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது தனது காதலர் மத்தியாஸ் உடன் தான் என்றும் அவருடன் 9 வருடங்களாக டேட்டிங்கில் இருப்பதை நினைத்து நான் வெட்கப்படவில்லை என்றும் டேட்டிங் தனது உரிமை என்றும் டாப்ஸி கூறியிருப்பதை தனது வீடியோவில் ஓபனாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


மேலும் நயன்தாராவே 7 ஆண்டுகள் தான் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் டாப்ஸி 9 ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து அவரையே ஓவர் டேக் செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.


Advertisement

Advertisement