• Jul 24 2025

ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறமாதிரி- ராதிகாவுடன் இணைந்து வடிவேலு செய்த ரகளை- வெளியான ரீல்ஸ் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் வடிவேலு, தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததால், ஹீரோ வேடங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார் .

அந்த வகையில் இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி உடன் சேர்ந்து வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்ஸ் உடன் வடிவேலு செய்துள்ள காமெடி அலப்பறைகளை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


சந்திரமுகி 2 திரைப்படத்தில் வடிவேலு உடன் ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், கங்கனா ரனாவத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்குகிறார். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ள நடிகர் வடிவேலுவும், நடிகை ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக எடுத்த ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் வடிவேலு ‘ரிஸ்க் எடுக்குறதுலாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி’ என தன்னுடைய பேமஸ் டயலாக்கை பேச அதைக்கேட்டு ராதிகா சரத்குமார் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. 



Advertisement

Advertisement