• Jul 25 2025

ஒரு கோடி பணத்திற்காக அந்த மாதிரி காட்சியில் நடித்த தமன்னா..! வற்புறுத்தி சம்மதிக்க வைத்த பிரபல இயக்குநர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடிகை தமன்னா திகழ்கிறார். தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது தமன்னாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. சமீபத்தில் தமன்னாவை பற்றிய சர்ச்சையான விஷயம் வெளியாகி இருக்கிறது.

சம்பளம் போக ஒரு நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் செலவுகளும் அதிகம். தங்களுடன் எத்தனை உதவியாளர்கள் வருகிறார்களோ அவர்களுக்கான சம்பளம், சாப்பாடு, பாதுகாப்பு என அத்தனையுமே தயாரிப்பாளர்களின் தலையில் விழுந்ததுதான். இதில் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே ரொம்பவும் உஷாராக அந்த நடிகைகளை வேலை வாங்கி விடுகிறார்கள்.

இப்படி ஒரு இயக்குனரிடம் தான் தமன்னா சிக்கி இருக்கிறார். தமிழில் படிக்காதவன் மற்றும் மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் சுராஜ். இவருடைய இயக்கத்தில் விஷால், சூரி, தமன்னா நடித்த திரைப்படம் கத்தி சண்டை. இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தமன்னாவுக்கு மட்டும் ஒரு கோடி சம்பளமாம்.

இதில் தமன்னா ஓவர் கிளாமராக நடித்திருப்பார். அதற்குக் காரணமே இயக்குநர் சுராஜ் தான். ஒரு கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரிஸ்க் எடுக்காமல் நடிப்பதற்கு, கிளாமராக நடிப்பது மேல் என்று தமன்னாவை ரொம்பவும் வற்புறுத்தி அந்தப் படத்தில் அப்படி நடிக்க வைத்திருக்கிறார். தமன்னாவும் விருப்பமே இல்லாமல் கொடுத்த சம்பளத்திற்காக அப்படி நடித்தாராம்.

Advertisement

Advertisement