• Jul 26 2025

டுவிட்டரின் அழிவு காலம் ஆரம்பம்... ப்ளூடிக் பறிபோனதால் கோபத்தில் அதிரடி முடிவெடுத்த யாஷிகா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய காலத்திலிருந்து தற்போது வரை அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார். அவ்வாறான மாற்றங்களில் ஒன்று தான் சந்தா கட்டி ப்ளூ டிக் பெறுவது. அந்த காலக்கெடு ஆனது நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. 


இதனைத் தொடர்ந்து சந்தா கட்டாத பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இதனால் மில்லியன் கணக்கிலான பாலோவர்களைக் கொண்டவர்களும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். அந்தவரிசையில் நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டர் கணக்கில் இருந்தும் ப்ளூடிக் நீக்கப்பட்டு இருக்கிறது. 


இதனால் அவர் தற்போது கோபத்துடன் ட்விட்டரை விட்டே வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது ட்விட்டரின் downfall ஆரம்பமாகிவிட்டது, காசு கொடுத்து verified ஆக இருக்க முடியாது, எல்லோரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடலாம் என மற்ற பிரபலங்களையும் அவர் தனக்கு சப்போர்ட் ஆக அழைத்து இருக்கிறார். இந்தப் பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.


Advertisement

Advertisement