• Jul 23 2025

அடிச்சுது பாரு லக்... குக்வித் கோமாளி பிரபலத்திற்கு ஜோடியான தமன்னா... அதுவும் இந்தப் படத்திலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'அரண்மனை 4'. அதாவது இப்படத்தினுடைய முதல் மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தான் நான்காவது பாகத்தை சுந்தர்.சி இயக்க முடிவெடுத்தார்.


அந்தவகையில் அரண்மனை 4வது பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்கெனவே ஹீரோவாக கமிட்டாகி பின்னர் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறினார். இதனையடுத்து விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சுந்தர்.சி நடிக்கின்றார்.


மேலும் இவருடன் இணைந்து இப்படத்தில் தமன்னா, மற்றும் ராஷி கண்ணாவும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அதில் சுந்தர்.சியின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்நிலையில் தமன்னாவின் ஜோடி யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


அதாவது 'குக் வித் கோமாளி' சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப்பிற்கு ஜோடியாக தான் தமன்னா நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. இவர் ஏற்கெனவே ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement