• Jul 24 2025

இந்த சிறிய வயதிலும்... சாதனை படைத்த அஜித் மகன் ஆத்விக்... குவியும் பாராட்டுக்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் தற்போது 'விடாமுயற்சி' படம் உருவாக காத்திருக்கின்றது. இடையில் சற்று ஓய்வெடுத்த அஜித் பைக் சுற்றுலாவினையும் மேற்கொண்டு வருகின்றார்.


சினிமாவில் எந்தளவிற்கு அஜித் பிசியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு தனது குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருவார். அதாவது நடிகை ஷாலினியை காதலித்துக் கரம் பிடித்த அஜித் ஒரு மகன், மற்றும் மகளுடன் இன்றுவரை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்.


இந் நிலையில் அப்பா, அம்மாவைத் தொடர்ந்து மகன் ஆத்விக்கும் சாதனை படைத்துள்ளார். அதாவது சமீபத்தில் மும்பையில் நடந்த புட்பால் கிளப் கேம்பிள் ஆத்விக் பங்கேற்றார். இதனையடுத்து தற்போது இவர் சென்னை FC ஜூனியர் அணியின் உடைய போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


இதனைத் தொடர்ந்து ஆத்விக்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement