• Jul 25 2025

அர்ஜுன் செய்த சூழ்ச்சி... பற்றி எரியும் கம்பெனி... அதிர்ச்சியில் உறைந்து போன தமிழ்... இனி நிகழப்போவது என்ன..? 'Thamizhum Saraswathiyum' promo video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் தொழிலார்கள் அர்ஜுனிடம் சென்று ஒரு பெரியவரைக் காட்டி "இவர் எவ்வளவு பெரிய சீனியர் தெரியுமா, இவரை உங்க மாமா கை நீட்டி அடித்திருக்கார், எங்களுக்கு இந்த வேலையே வேணாம், மரியாதை இல்லாத இடத்தில் நாங்க வேலை செய்ய மாட்டோம்" எனக் கூறிச் செல்கின்றனர்.


பின்னர் அந்தத் தொழிலார்கள் தமிழின் கம்பெனிக்கு வேலைக்கு கேட்டு செல்கின்றனர். தமிழும் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றார்.


இதனால் கோபமடைந்த அர்ஜுன் இனிமேல் தமிழின் கம்பெனி ரன் ஆக கூடாது, எனக் கூறி தமிழின் கம்பெனியை மின்சாரம் மூலம் பற்றி எரிய வைக்கின்றார். தமிழின் கம்பெனியும் எரிந்து சுக்கு நூறாகின்றது. இதனை அடுத்து தமிழ் அதிர்ச்சியில் உறைந்து போகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement