• Jul 26 2025

கண்ணீர் வடித்த ஷிவின்-ஓ..இது தான் காரணமா..62வது எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 62 வது நாள் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்...

கமல் சேர் வந்து அமுதவாணன் தனம் ரச்சிதா என பலரையும் பாராட்டினார்.இவ்வாறு அதிகம் பெமோர்ன்ஸ் செய்யாமலே மணிகண்டனிடம் அதிக எமவுண்ட் இருந்துச்சு.இதையடுத்து,பிக் பாஸ் வீட்டில் 60 நாட்கள் ஆகியும் உண்மை முகத்தை வெளியில் காட்டாமல் கபட நாடகம் போடும் வேடதாரி யார் என கமல் கேள்வி கேட்டார். மேலும் இந்த கேள்விக்கு பதில் சொல்லி நாடகமாடுபவரின் முகத்தில் மரு வைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முதல் ஆளாக எழுந்த அசீம், ரச்சித்தாவின் உண்மை முகம் இது இல்லை அவர் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார் என்றார். அதே போல ராம், ஷிவின் என பலரும் ரச்சித்தாவின் பெயரை கூறி மரு வைத்தனர்.

அதேபோல, விக்ரமனன் இந்த வீட்டில் கேமிரா இருப்பதால் எப்போதும், நீதி, நேர்மை என்று பேசி வருகிறார். ஆனால் வெளியிலும் இவர் இப்படிதான் இருப்பார் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், விக்ரமனன் கேமிராக்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றார் ஆயிஷா. இதை கருத்தை தனலட்சுமியும் கூறி அவருக்கு மரு வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட விக்ரமனன் நான் வெளியில் எப்படி பேசுவேன், நண்பர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்று உங்களுக்கு தெரியுமா, இல்லை என்னுடைய விவாத நிகழ்ச்சியை நீங்கள் பார்த்து இருக்கிறார்களா என கமலின் முன்பே ஆயிஷா, தனலட்சுமியிடம் கேள்வி எழுப்பினார் விக்ரமனன். அப்போது குறுக்கிட்ட கமல் மற்றவர்களையும் பேச விடுங்கள், மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள் என சரியான நோஸ் கட் கொடுத்தார். இதைக்கேட்ட ஆடியன்ஸ் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.


அதன் பிறகு ஏ.டி.கே. தன்னுடைய ஞாயம் என அசீம் இடம் கத்திக்கொண்டு இருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் டபிள் எவிக்சனில் முதல் ஆளாக ராம் வெளியேறி இருந்தார்.எவிக்சன் எனக் கூறியதும் ஷிவின் கதறி கதறி அழுது இருந்தார்.அத்தோடு இன்று ஆயிஷா வெளியேறிவிட்டார் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement