• Jul 26 2025

எந்த சீசனிலும் இல்லாத புது ரூல்ஸை இந்த சீசனில் கொண்டு வந்த கமல்ஹாசன்- இப்படி பண்ணீட்டீங்களே சேர்- புலம்பும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 21 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளதால், யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. 

இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஏடிகே, அசீம், ஜனனி, ராம், ஆயிஷா மற்றும் கதிரவன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் இருந்து இருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளனர். இதில் ராம் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் வெளியேறுவது உறுதி. 


எஞ்சியுள்ள ஏடிகே மற்றும் ஆயிஷா இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் வழமையாக ஞாயிறு எப்பிஷேட்டில் தான் போட்டியாளர்களை வீட்டை விட்டு அனுப்புவதுண்டு.

அதன்படி ராமும் ஆயிஷாவும் ஒரே தினத்தில் தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ராம் சனிக்கிழமை எப்பிஷோட்டில் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் ராம் ரசிகர்கள் என்ன சேர் புது ரூல்ஸை கொண்டு வந்திட்டீங்களா என்று கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement