• Jul 24 2025

ராஷ்மிகாவுடன் காதலா..? முதன் முறையாக உண்மையை உடைத்த தெலுங்கு நடிகர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கி வரும் முன்னணி கதாநாயகிகளில்  ஒருவர் ரஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஷ் என்று சொல்லும் இந்திய அளவில் ரஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்திருக்கிறார். 

ஆனால், திரையுலகில் இவர் பிரபலம் அடைவதற்கு முன்னரே கன்னடப் பிரபலம் ஒருவருடன் காதலில் விழுந்து, அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்ததாகவும் பின்னர் முறிவு ஏற்பட்டது இருவரும் பிரிந்து விட்டதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.


இதனையடுத்து ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இவர்கள் இருவரும் இதுகுறித்து மௌனம் சாதித்த நிலையில், வெளிநாடுகளில் இருவரும் ஒன்றாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கின.


பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாசை காதலிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக விமான நிலையம் வரும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. 


இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் நடிகர் சாய் ஸ்ரீனிவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தான் ராஷ்மிகாவை காதலிக்கவில்லை என்றும் ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு தான் அடிக்கடி போகும்போது ராஷ்மிகாவை பார்க்க நேர்வதாகவும் ஏர்போர்ட்டில் தாங்கள் இருவரும் ஒன்றாக போவதைப் பார்த்து, தாங்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான் என்றும் அவர் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement