• Jul 25 2025

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திருமணத்தில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள்- வெளியாகிய போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகர் தான் வருண் தேஜ். இவர் கடந்த சில வருடங்களாக நடிகை லாவண்யாவை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.ஆனால் அது குறித்து இருவரும் வெளிப்படையாப் பேசாமல் மௌனம் காத்து வந்தனர்.


இந்த நிலையில் இந்த ஜோடி  கடந்த வாரம், தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தனர்.இதை தொடர்ந்து, வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபதியின் குடும்பத்தினர் முன்னிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. 


தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகப் பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபதி ஆகியோர் மிஸ்டர் , ராயப்பிரி போன்ற படங்களில்  இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும், மிஸ்டர் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றிருந்த போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது. 


இவர்களின் திருமணத்தை டெஸ்டினேஷன் திருமணமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வருணும், லாவண்யாவும், இவர்கள் காதல் மலர்ந்த இடமான இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement