• Jul 25 2025

ஆஹா கல்யாணம் சீரியல் மகாவா இது?- சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு TRPயில் குறைந்து வரும் சீரியல்கள் நிறுத்தப்பட்டு புத்தம்புது தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.அவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ம சீரியல்களில் ஒன்று தான் ஆஹா கல்யாணம்.


 3 மகள்கள் பெற்ற ஒரு அம்மாவின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. வசதியான குடும்பத்தில் மூத்த பெண்ணை கட்டிக் கொடுக்க நினைத்து அவர் செய்த பிழையால் இரண்டாவது மகளுக்கு அந்த திருமணம் நடைபெற்று விட்டது.

அதன் படி தற்போது சூர்யா-மகாவின் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி கடந்த எபிசோடில் நடந்து முடிந்தது.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடிக்கும் மகா என்கிற அக்ஷயாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் நடிகையா இது சின்ன வயதில் இவ்வளவு கியூட்டாக இருக்கிறாங்களே என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement