• Jul 24 2025

நோய் பாதிப்பால் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு விட்ட பிரபல நடிகர்?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மரபணு முன்கணிப்பு சோதனையில் ஈடுபட்ட போது தனக்கு அல்சைமர் நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரியவந்தது என கூறியுள்ளார்.

எனினும் இதன் காரணமாக சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்புவதாக" கூறியுள்ளார்.



39 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்,  படப்பிடிப்பின் போது வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது மரபணுவில் APOE4 மரபணுவின் இரண்டு நகல்களை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அத்தோடு இந்த APOE4 அல்சைமர் நோயின்  தாக்கத்துக்கு காரணமானது.  தனியார் நிறுவன தொலைக்காட்சிக்காக அளித்த பேட்டியின் போது இந்த தகவலை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.



மேலும், "தனது தாத்தாவுக்கு அல்சைமர் இருப்பதால் இந்த சோதனை முடிவு ஆச்சரியமாக இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.. கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் ‘Thor’  சூப்பர் ஹீரோவாக 8  படங்களில்  நடித்துள்ளார்.  ஹாலிவுட் நடிகை எல்சா படக்கியைத் திருமணம் செய்து கொண்ட  இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

Advertisement

Advertisement