• Jul 24 2025

வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 60இற்கும் அதிகமான படங்கள் வெளியாகி இருக்கின்றன.


அந்தவகையில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமையினால், தற்போது வெளியாகி இருக்கின்ற வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே அதிகளவான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்தன. 


இவ்வாறு விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 'வாரிசு' திரைப்படமானது பொங்கல் பண்டிகையன்று பிரமாண்டமாக வெளிவந்தது. மேலும் இப்படமானது முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெருமளவான வரவேற்பை பெறத் தொடங்கியது. 


இருப்பினும் இந்த வரவேற்பு, வசூல் அனைத்துமே தமிழ்நாட்டில் மட்டும் தான் எனக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பார்த்த லாபத்தை வெளிநாடுகளிலும் வாரிசு படம் அதிகம் ஈட்டித் தந்துள்ளது.


இந்நிலையில் வாரிசு படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களும் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்காக தற்போது அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.


அந்தவகையில் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி வாரிசு படம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனையறிந்த தளபதி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement