• Jul 23 2025

இது லோகேஷ் கனகராஜ் கிட்ட இருந்து தான் எடுத்தேன்- ஹெயார் ஸ்டைல் குறித்து ஓபனாகப் பேசிய கவின்

stella / 2 years ago

Advertisement

Listen News!


அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் தான் 'டாடா'.இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  காதல் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முழுப்படப்பிடிப்பும்  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


 ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் பிரபல சேனலுக்கு நடிகர் கவின் & அபர்ணா தாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அப்போது நடிகர் கவினிடம், "டாடா படத்திற்காக அவரது லுக் எப்படி வடிவமைக்கப்பட்டது?" என கேள்வி கேட்கப்பட்டது. 


இதற்கு பதில் அளித்த கவின், "இந்த படத்தோட இயக்குநர் என் கல்லூரி நண்பன். இந்த கதை 4 வருடம் முன்பே தெரியும். சரியான நேரத்திற்கு காத்திருந்து இப்போ பண்ணோம். இந்த லுக்கை லோகேஷ் கனகராஜ் அண்ணாட்ட இருந்து இன்ஸ்பிரேஷன் ஆகி பண்ணேன். அவரோட ஹேர் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவர் ரொம்ப அமைதியா இருப்பார். அவரோட லுக் எனக்கு பயங்கரமா பிடிச்சு இருந்தது. அவர் அளவுக்கு இந்த லுக் இருக்கானு தெரியவில்லை. நான் கொஞ்சம் லோகேஷ் கனகராஜ் அண்ணாட்ட இருந்து இன்ஸ்பிரேஷன் ஆகி எடுத்தேன்." என கவின் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement