• Jul 24 2025

தளபதி செம ஃபிகருனு கூட சொல்லலாம்- மாற்றுத்திறனாளி ரசிகரை விஜய் தூக்கியதற்கு இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அண்மையில் பனையூரில் தன் ரசிகர்களை சந்தித்து பேசி பிரியாணி விருந்து வைத்திருந்தார்.

இந்த சந்திப்பில் நடிகர் விஜய்  நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரை  தன் கையில் தூக்கியபடி புகைப்படம் எடுத்தார். இந்நிலையில் அது பற்றி பிரபாகர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.


தளபதி என்னை தூக்குவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.அவர் என்னை தூக்கியதை மறக்கவே முடியாது என விஜய்யின் தீவிர ரசிகரான பிரபாகர் தெரிவித்தார். இதற்காக விஜய் ரசிகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.இருந்தாலும் சிலர் விஜய் ப்ரமோஷனுக்காக செய்கின்றார் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தனர்.

விஜய்யை பார்க்க வந்தபோது போட்டிருந்த வெள்ளை சட்டையை பிராபகர் இன்று வரை கழற்றவில்லை. அந்த வெள்ளை சட்டையின் நிறம் கருப்பாக மாறினாலும் பரவாயில்லை. தளபதி தொட்ட சட்டை. அவர் என்னை தூக்கியதால் நான் வைரலாகிவிட்டேன். தளபதியை பார்க்கச் சென்றபோது என் தம்பி என்னை தூக்கிச் சென்றார். அதை பார்த்த தளபதி வாங்க, வாங்க, குடுங்க குடுங்கனு சொல்லி என்னை வாங்கிக் கொண்டார் என பிரபாகர் தெரிவித்துள்ளார்.


அவர் தூக்கியதும் எனக்கு பேச்சே வரவில்லை. பயங்கர சந்தோஷமாக இருந்தேன். தளபதியை பார்க்க வேண்டும் என்பது பல வருஷ கனவு. ஒரு முறையாவது பார்த்துவிடுவோமா என்று ஏங்கினேன். அவர் என்னை தூக்கியபோதே இறந்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்கு தளபதியை அந்த அளவுக்கு பிடிக்கும். அந்த தருணத்தை நினைத்து தூக்கமே வரவில்லை. தளபதி செம ஃபிகருனு கூட சொல்லலாம், பயங்கரமாக இருக்கிறார் என்றார் பிரபாகர்.

பிரபாகர் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, இப்போ புரியுதா எங்க விஜய்ணா ஏன் அந்த ரசிகரை தூக்கினார் என்று என நெட்டிசன்களுடன் சண்டை பிடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement