• Jul 25 2025

கர்ப்பமாக இருப்பதை மறைத்த ஸ்ரேயா... நீண்டநாள் கழித்து வெளிவந்த உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி நாயகியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். 


இவ்வாறாக படங்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்த ஸ்ரேயா 2018-இல் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இத்தம்பதியினருக்கு ராதா என்கிற பெண்குழந்தை ஒன்று இருக்கிறது. 

ராதா பிறப்பதற்கு முன்னர் ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவே இல்லை, ஆனால் திடீரென ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது, அவளுக்கு ராதா என பெயர் சூட்டி இருக்கிறோம் என அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.


இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா அளித்திருக்கும் பேட்டியில் தான் கர்ப்பத்தை மறைக்க என்ன காரணம் என்பது குறித்து ஓப்பனாகப் பேசி விளக்கி இருக்கிறார். அதாவது " நிறைய பயம் இருந்தது. நான் எனக்காக நேரம் செலவழிக்க விரும்பினேன். நான் குண்டாகி இருந்ததை பற்றி கூட கவலைப்படவில்லை. என்னை பற்றி யார் என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை நான் குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தினேன்" எனக் கூறியிருந்தார்.


அதுமட்டுமல்லாது "நான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தால் அதன் பின் மீண்டும் சினிமாவுக்கு வர எனக்கு நீண்ட காலம் எடுக்கும். யாரும் உடனே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள், மேலும் நான் எனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்தபோது ஏற்கனவே பல படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருந்தேன். 

அந்த நேரத்தில் ராதா 9 மாத குழந்தை. படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிக நேரம் செலவழித்து குறைத்தது ரொம்பவே பிரெஷர் ஆக இருந்தது" எனவும் கூறி இருக்கிறார் ஸ்ரேயா.

Advertisement

Advertisement