• Jul 24 2025

உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி- ஹரடோல் தாஸ் கதாப்பாத்திர புகைப்படங்களை வெளியிட்ட அர்ஜுன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவான 'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. முதல் நாள் சுமார் 140 கோடிக்கு, மேல் இப்படம் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில்... 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

மேலும் முதல் நாளே, தளபதி விஜயின் ரசிகர்களுடன் சேர்ந்து, அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்தனர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தை பார்த்து விட்டு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.


சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் 'லியோ' படத்தை பார்த்துள்ளார். கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும், விக்ரம் படத்தை போல் இப்படத்திலும் லோகேஷின் மேக்கிங் இவரை மெர்சலாக்கியதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் இப்படத்தில் ஹரடோல் தாஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் அர்ஜுன். இவர் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரடோல் தாஸிற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்ததற்கு நன்றி எனப் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement