• Jul 26 2025

அந்த நடிகர் என்னை அழிக்க பார்த்தார்... பகீர் கிளப்பிய நடிகை ஷகீலாவால் பரபரப்பில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் தன்னை அழிக்கப் பார்த்ததாக நடிகை ஷகீலா கூறியிருப்பது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1990களில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. ஆபாச படங்களின் மூலம் பெரும் பிரபலமானார். நடிகை ஷகீலாவின் ஆபாச படங்கள் அதிகமாக மலையாள மொழியில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஷகீலா படத்திற்கு என்றே அப்போதைய கால கட்டத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது.

எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆனாலும் ஷகீலாவின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கூட்டம் ஷகீலா படத்திற்குதான் அலைமோதும். இதனால பெரும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் கூட ஷகீலா படம் ரிலீஸ் ஆகிறது என்றால் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்களாம்.

​ அத்தோடு ஷகீலா படத்தின் ரிலீஸால் பல முன்னணி நடிகர்கள் தங்களின் பட ரிலீஸை தள்ளி வைத்த தகவல்களும் வெளியான உள்ளன. நடிகை ஷகீலா சினிமா படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷகீலா.


எனினும் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை ஷகீலா யூட்யூப் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவ்வாறுஇருக்கையில்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ஷகீலா தான் ஆபாச படங்களில் நடித்த போது பட்ட கஷ்டங்களையும் சந்தித்த பிரச்சனைகளையும் மனம் திறந்து கூறியுள்ளார்

அதில் தான் நடிகர் மோகன் லாலின் தீவிர ரசிகை என கூறியுள்ளார் ஷகீலா. அத்தோடு  நடிகர் மம்மூட்டி மேல் தனக்கு கோபம் இல்லை என்று கூறியுள்ள நடிகை ஷகீலா அவர் தான் தன்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார் என்று தெரிவித்துள்ளார். இது கூட தான் கேள்விபட்டது தான் என்றும் அதே மம்மூட்டி ஒரு கட்டத்தில் கோயில் விழாவுக்கு தன்னை அழைப்பதற்கு எந்த எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


நடிகர் மம்மூட்டியின் கோபம் நியாயமானது தான் என்று கூறியுள்ள நடிகை ஷகீலா, அவர்கள் 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள் என்றும்ட தாள் 10 லட்சத்தில் படம் எடுக்கிறோம் என்றும் கூறியுள்ளார். 10 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கும் படம், 4 கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படத்தை காலி பண்ணினால் கோபம் வரும், அதுபோலதான் மம்மூட்டிக்கு தன் மேல் கோபம் இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அவர்கள் தன்னை தடை செய்ய நினைத்த போது, தானே தனது நடிப்பை தடை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா.அத்தோடு  தன்னுடைய கெரியரில் எல்லாமே நல்ல தருணங்கள்தான் என்று கூறிய ஷகீலா, தனது நடிப்பு மற்றவர்களை பாதித்தால்தான் வருத்தப்பட வேண்டும் தனக்கு கிடைத்ததை தான் தான் செய்தததாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் மம்மூட்டி தனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி தன்னை அழிக்க முயற்சித்ததாக நடிகை ஷகீலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ 


Advertisement

Advertisement